Tuesday, 9 July 2013

பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருப்பதற்கு! ! ! !



தயவு செய்து நண்பர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்....

படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மேலே இருந்து பெட்ரோல் நிரப்புமிடத்தில் நீங்கள் பெட்ரோல் போட்டுக்கொள்கிறீர்களா...?

உங்களுக்கான எச்சரிக்கை இது...

நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்...

இது போன்ற இடங்களில் மீட்டர் பெட்ரோல் நிரப்பும் நாசில் மீது இருக்கும்...

பெட்ரோல் நிரப்பும் நபர் உங்களிடம் எவ்வளவு என்று கேட்பார்...

நீங்கள் 100.00 ரூபாய் அல்லது 200.00 ரூபாய் என்று கூறுவீர்கள்...

மீட்டரில் இரண்டு வரிசைகளில் எண்கள் ஓடும்...

முதலில் உள்ளது லிட்டர் அளவு...

அதற்குக் கீழே உள்ளது தொகை...

பெட்ரோல் நிரப்பத் தொடங்குகையில் 0.0000 என்று இரண்டு வரிசைகளிலும் இருக்கும்...

நீங்கள் நூறு ரூபாய் என்று கூறினால்
பெட்ரோல் நிரப்பத் தொடங்கியதும்
லிட்டர் அளவு வருமிடத்தில் 1.0000 என்று வந்ததும் பெட்ரோல் நிரப்பும் நபர் நிறுத்தி விடுவார்...

நமக்கு அது ஒரு லிட்டர் என்பது தெரியாமல் நகர்ந்துவிடுவோம்...

அவ்வளவுதான் 100.00 ரூபாய்க்கு 30.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்பட்டுவிட்டது...

200.00 ரூபாய்க்கு 60.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்படும்...

நீங்கள் கூறும் 100.00-இன் மடங்குகளுக்கு ஏற்ப நீங்கள் ஏமாறும் தொகை 30.00-இன் மடங்குகளில் அதிகரிக்கும்...

ஏற்கனவே பெட்ரோல் விலை சுமை போதாதென்று இது வேறு...

சென்னையில் உள்ள நண்பர்கள் (குறிப்பாக பத்திரிகை நண்பர்கள்)யாரேனும் டெமோ பார்க்க ஆசைப்பட்டால்...

சென்னை, ஈக்காடுதாங்கல்,ஐ சி ஐ சிஐ வங்கிக்கு (ICICI BANK ) அருகில்,
VIRTUSA TOWER -க்கு எதிரில் (காசி தியேட்டர் பாலம் அருகில்) உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுங்கள்...

இன்று நண்பரும் நானும் அனுபவப்பூர்வமாகஇதனை உணர்ந்தோம்...

உரிமையுடன் கேட்டு மீதத்தொகைக்கு பெட்ரோல் வாங்கினோம் ...

மேலும் யாரும் ஏமாறாமல் இருப்பதற்கு...

தயவு செய்து நண்பர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்....

மனிதனை பற்றிய சில உண்மைகள்! ! ! !



* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால்அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவைமொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

Sunday Special - மட்டன் பிரியாணி! ! ! !



நம் வீட்டில் எப்போது பிரியாணி செய்தாலும் நமது இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் செய்வது போல் இருப்பது இல்லை என்ற குறை இருந்து வந்தது, அதனால் என் இஸ்லாமிய தோழியிடம் அவர்களின் பிரியாணி செய்முறையை கேட்டு செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. அந்த பிரியாணிசெய்முறை உங்களுக்காகவும்

தேவையான பொருட்கள்;-

அரிசி - 1 கிலோ
மட்டன் - 1 கிலோ
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
தக்காளி - 1/4 கிலோ
வொங்காயம் - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 10
பட்டை - 10
லவங்கம் - 10
ஏலக்காய் - 10
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
எலும்மிச்சை – 1
புதினா - 1/2 கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
எண்ணெய் - 50 கிராம் (தேவைக்கு)
நெய் - 50 கிராம் (தேவைக்கு)
உப்பு - தேவைக்கு
கேசரிப்பவுடர் - தேவைக்கு

அரைக்க வேண்டியவை;-

இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும்.
பட்டை- 5, லவங்கம்- 5, ஏலக்காய்- 5,மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்

செய்முறை;-

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய்இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை-5, லவங்கம்-5, ஏலக்காய்-5 போட்டு அத்துடன் இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரைநன்கு வதக்கவும்.

அதனுடன் கறி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையும் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அத்துடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.

முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்துநன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன்மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். (தம் விடவும்) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும்.

கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி தயார் .