Friday, 7 June 2013

புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா??

புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா??

சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா....

ஒரு நிமிஷம் இதப்படிங்க..

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

"என்னங்க இது அநியாயமா இருக்கு..?
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு
தானே கேக்க வர்றீங்க..?

ம்ம்... என்னங்க பண்றது..?

காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..

இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!

Thursday, 6 June 2013

பாம்பிற்குப் பால் ஊற்றுவது மற்றும் முட்டை வைப்பதன் காரணம் என்ன..?


உண்மையும், விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..?!

ஆதி காலத்தில் மனிதனுக்குப் பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தன. காரணம் அடர்ந்த காடுகள் மத்தியில் மனித நடமாட்டம் மிகமிகக் குறைவு. மனிதனை விடப் பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையைப் பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஆற்றில் வெள்ளம்
கரை புரண்டு ஓடுகிறது.
இக்கரையில் இரண்டு பேர்
நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை.
எப்படி அக்கரைக்குப்
போவது?

இந்த நேரத்தில்
ஒரு காளை மாடு அங்கே வந்தது.
அதுவும் அக்கரைக்குப்
போக வேண்டும்.
ஆனாலும் அதற்கு ஓடம்
எதுவும்
தேவைப்படவில்லை.
அப்படியே ஆற்றில்
பாய்ந்தது... நீந்த
ஆரம்பித்தது. இதைப்
பார்த்த இரண்டு பேரில்
ஒருத்தன் குபீர்
என்று ஆற்றில்
குதித்தான். அந்தக்
காளை மாட்டின் வாலைக்
கெட்டியாகப் பிடித்துக்
கொண்டான்.
காளை மாடு சுலபமாக
அவனை இழுத்துச்
சென்று அக்கரையில்
சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான்.
நமக்கு ஒரு ‘வால்’
கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய்
வந்து ஆற்றில் குதித்தது.
இதுதான் நேரம்
என்று இவனும் ஆற்றில்
விழுந்து அந்த நாயின்
வாலைப் பிடித்துக்
கொண்டான். இந்த
மனிதனையும் இழுத்துக்
கொண்டு நாயால் ஆற்றில்
நீந்த முடியவில்லை.
திணறியது.
ஒரு கட்டத்தில் நாய்,
‘வாள்... வாள்’ என்று கத்த
ஆரம்பித்து விட்டது.
விளைவு _
இருவருமே ஆற்று நீர்
போகும்
திசையிலேயே மிதந்து போய்க்
கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் போக வேண்டிய
திசை வேறு.
போய்க் கொண்டிருக்கிற
திசை வேறு.
கரை சேர நினைக்கிற
மனிதர்களின் கதை இது.
சிலர்
கரையிலேயே நின்று விடுகிறார்கள்.
சிலர் காளையின் வாலைப்
பிடித்துக்
கொள்கிறார்கள். சிலர்
நாயின் வாலைப் பற்றிக்
கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன
சொல்கிறது தெரியுமா?
நீங்கள் கரை சேர
விரும்புகிறீர்களா?
அப்படியானால் எதையும்
பற்றிக் கொள்ளாதீர்கள்.
ஏற்கெனவே பற்றிக்
கொண்டிருப்பதை எல்லாம்
விட்டு விடுங்கள்!

ஆற்றின்
நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது.
உள்ளே ஏதாவது பொருள்
இருக்கும் என்கிற
ஆசையில் ஒருத்தன் நீந்திச்
சென்று அதைப்
பற்றுகிறான். நீண்ட நேரம்
ஆகியும்
கரை திரும்பவில்லை.
நடு ஆற்றில் போராடிக்
கொண்டிருக்கிறான்.
கரையில்
நின்று கொண்டிருக்கிற
நண்பர்கள் கத்துகிறார்கள்...
‘‘நண்பா...
கம்பளி மூட்டையை இழுத்துக்
கொண்டு உன்னால் வர
முடியவில்லை என்றால்
பரவாயில்லை...
அதை விட்டுவிடு!’’
ஆற்றின்
நடுவே இருந்து அவன்
அலறுகிறான்: ‘‘நான்
இதை எப்பவோ விட்டுட்டேன்...
இப்ப இதுதான்
என்னை விடமாட்டேங்குது
. ஏன்னா,
இது கம்பளி மூட்டை இல்லே.
கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள்
தடுமாறிப் போகிறார்கள்.
சரியாகப் பற்றுகிறவர்கள்
கரையேறி விடுகிறார்கள்.
பற்றையே விடுகிறவர்கள்
கடவுளாகி விடுகிறார்கள்!

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :

பிராய்லர் கோழி தற்போது கிலோ 180rs க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ?

பிறந்து 55நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ... இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...

இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120rs-இல் இருந்து 40rs நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் , இவர்களின் திட்டத்தின் படி 180rs என்று விலையை உயர்த்தி , பிறகு 120rs என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது,,, மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் ... .ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக்கொள்கின்றனர்....

நாமக்கலின் HEALTH CARE ORGANIZATION எவ்வளவோ முயற்ச்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம் திணை என்ற தொகுப்பில் மட்டும் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது .....

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதுபற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று... அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது... அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!

அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலகை உலுக்கி மாற்றிய 'மைக்ரோசாஃப்ட்’, 'ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!



ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக்கொண்டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்?

மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே... அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்... நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.

கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.

நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெ டுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சி யின், பின்னணி குறித்து, 'கூவாத கோழியும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.

'பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன!'' என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது..

தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது ,

இந்த கட்டிடத்தை முதலில்
கட்டும் போது, இதன் கீழ் உள்ள
மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம்
கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட
கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும்
மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம்
சாயத்தொடங்கியது
,இரண்டாம் தளம் கட்டும்
போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம்
சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர்
தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள
மண் இதற்கு ஒத்துழைத்தது !
இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க
முடிந்தது ! ஒரு கேவலமான
கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான
ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும்
உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர்
போன ராஜா ராஜா சோழனால்
கட்டப்பட 216அடி உலகையே மிரளச்செய்யும்
தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில்
கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள
ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ )
எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும்
கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த
காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட
கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம்
பெறவில்லை !

சில நேரங்களில்
வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும்
நாம், அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின்
பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !

மருத்துவ குறிப்புகள் -- இய‌ற்கை வைத்தியம்:-

*காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

*துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய்களை தடுக்கலாம்.

*நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் - இந்த இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும்.

*பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, அதை மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

*பொன்னாங்கண்ணிக் கீரையை பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும்.

*சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்.

*கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

*திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.

*துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

*எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

*வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும்.

*கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

ஓர் உண்மை சம்பவம்

விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டு போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர். அவர் விஜகாந்த் நடித்த
கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றியவர். உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இதுவரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இருக்காங்க நீ வேற போயா என்று சொல்லவும்,அந்த உதவி இயக்குனர் மருத்துவ செலவுக்கு தேவையான இரண்டு லட்சத்தில் ஒன்னேகால் லட்சம் இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே..
முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்று சொல்ல கடுப்பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டாராம்.

மனம் தளராத அந்த உதவி இயக்குனர்,மருந்து வாங்க 500/ ரூபாய் கேட்டாராம் அதைக்கூட தராமல் துரத்தி விட்டாராம் விஜயகாந்த்.
நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனிடம் விஷயத்தை சொல்ல அவர் அஜித்திடம் அழைத்து போனாராம்.

படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் மூவருக்கும் உணவு வழங்கிவிட்டு நடிக்கப் போய் விட்டாராம்.

பேசாமல் அவர் போனதும் மனம் வெந்து போய்விட்டார்களாம்.

ஒரு மணிநேரம் கழித்து வந்த அஜித் சரி ஆரம்பிங்க என்றவுடன் இருவருக்கும் புரியவில்லை .
அஜித் இவர்கள் கதை சொல்ல வந்திருக்கிறார்கள் என்று நினைத்து இவர்களுக்கு நேரம் ஒதுக்குவதற்காக வேக,வேகமாக நடித்து கொடுத்து விட்டு வந்தாராம்..

மணவாளன் குழந்தையின் ஆபரேசனுக்கு பணம் கேட்டு வந்தோம் என்று சொல்ல கோபத்தில்துடித்த அஜித் இதை முதலிலேயே சொல்ல கூடாதா நான் கதை சொல்ல வந்தீர்கள் என்றல்லவா நினைத்தேன் எனறு கடிந்து எவ்வளவுதேவை என்று கேட்டாராம்.

விஜயகாந்திடம் திட்டு வாங்கிய பயத்தில் உதவி இயக்குனர் ஒரு ஐயாயிரம் கொடுத்து உதவுங்கள் என்றாராம்.

கோபமான அஜித் மொத்தம் தேவை எவ்வளவு என்று சொல்லுங்கள் என்று அதட்டவும்,எழுபத்து ஐந்து ஆயிரம் தேவை என்று சொல்லவும் ,மொத்தமாக நானே தருகிறேன் ஆனால் இதை பத்திரிக்கைக்கு சொல்லக்கூடாது என்ற கண்டிப்புடன் உடனே செக் போட்டு கொடுத்து விட்டாராம்.

அஜித்தின் இந்த மனிதநேயம் எனக்கு நெகிழ்ச்சியில் கண்ணீர் வரவைத்து விட்டது.

நாட்டை ஆள்வதற்கு துடிக்கும் விஜயகாந்தின்
மனதிற்கும் ,செய்வதை பிறர்க்கு தெரியாமல் செய்ய நினைக்கும் அஜித்தின் மனதிற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து....!!

பூகம்பம் வருவதை விலங்குகள் அறியுமா?

பூகம்பம் வந்து உலுக்கிய பிறகு, ‘அது எவ்வளவு தீவிரமானது’ என்பதை ரிக்டர் அளவில் அளக்கலாம். மனித முயற்சி இதை மட்டுமே சாத்தியமாக்கி இருக்கிறது. ‘இந்த நேரத்தில், இந்த இடத்தில் இப்படி ஒரு பூகம்பம் வரலாம்’ என கணித்துச் சொல்லும் டெக்னாலஜி இன்னமும் கை கூடவில்லை. ஆனால், ‘பூகம்பம் வருவதை விலங்குகளும் பறவைகளும் முன்கூட்டியே உணர்ந்து கொள்கின்றன’ என்று உலகம் முழுவதும் நம்பிக்கை இருக்கிறது.

உண்மையில் விலங்குகள் பூகம்பத்தை உணர்ந்து கொள்ளுமா என்றால், அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. விஞ்ஞானம் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால் சீனா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நில நடுக்கம் அதிகம் நிகழக்கூடிய நாடுகள், ‘விலங்குகளுக்கு இந்த ஆற்றல் உண்டு’ என்று வாதிடுகின்றன. இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழ்ந்திருந்தால், மனிதனும் பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறிய முடியும் என்கிறார்கள்.

விலங்குகள் உண்பது, உறங்குவது எல்லாமே பொதுவாக தரையில்தான். தரைமீதுதான் பெரும்பாலான நேரங்களில் காதை வைத்துத் தூங்கும், தரைக்கும் விலங்குகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அதனாலே தரையில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக்கூட அவற்றால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ரயில் தண்டவாளத்தில் காதை வைத்தால் தூரத்தில் வரும் ரயில் சத்தம் கேட்பதைப் போல, தரையின் மீதே காதை வைத்திருப்பதால் தூரத்தில் ஏற்படும் நில நடுக்கத்தின் சத்தத்தைக் கேட்க முடிகிறது என்கிறார்கள். விலங்குகளைப் போலவே கற்கால மனிதனும் பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்டான். அதற்கேற்ப இடத்தை மாற்றினான்.

‘‘நவீனகால மனிதர்கள் வாகனங்களுக்குப் பழகியதால், அதிர்வு களைத் தாங்கித் தாங்கி உடல் பழக்கப்பட்டு விட்டது. இதனால் பூகம்பத்தின் மெல்லிய அதிர்வுகளை உணர முடிவதில்லை. இயற்கையை விட்டுச் செயற்கைக்கு மாறியதால்தான் இதெல்லாம் தெரிவதில்லை’’ என்கிறார்கள் ஜப்பானியர்.

நிலநடுக்கத்திற்கு முன்பு நிலத்தின் மீது கந்தக வாசனை வீசும் என்றும், இதனை விலங்குகள் முன்கூட்டியே புரிந்துகொள்ளும் என்றும், பூகம்பத்துக்கு முன்பு கடல் நீர் கலங்கி, இயற்கையான கடல் நிறத்தில் இருந்து வேறுபட்டுத் தெரியும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. பறவைகள் இதை உணர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றுவிடுகின்றனவாம். இதையெல்லாம் விஞ்ஞானம் இன்னும் உறுதிப்படுத்தாததால், உண்மை என்று நம்ப முடியாத நிலையாக உள்ளது என்பதே உண்மை.

"எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்."

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம்
தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’
என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு
மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது.
மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.
அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி,

‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,

‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா?
உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’
என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை
துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.........!!!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்.

காய்கறி வாங்குவது எப்படி?

இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.. உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமா க இருக்கும்.ஒருமுறை அறிந்ததும் அறியாததும் பக்கத்திற்கு வந்து பாருங்கள்...

கோபம் வேண்டாம்

ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான்.

ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது.

அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது.

உடனே கடவுளை கூப்பிட்டான், கடவுளே எனக்கு தரிசனம் தா...! என்று

கடவுளும் வந்தார்...!

பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? கடவுள் கேட்டார்.

அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்கவில்லை. கோவம் கண்ணை மறைத்தது.

தெய்வமே… நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோவம் தீர அடிக்க வேண்டும்.

இதுதான் பக்தன் கேட்ட வரம். வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.

பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே.

இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான்.

சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது என்றார் கடவுள். வருத்தப்படமாட்டேன் என்றான் அந்த கோபக்காரன்.

சரி.. தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார், தண்டித்து கொள் என்று சொல்லி வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார்.

பக்தன் திரும்பி பார்த்தான். அங்கே நின்றது சிங்கம். :)

பழிவாங்கும் கோவம் மறைந்தது. பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. கடவுளே என்னை காப்பாத்து காப்பாத்து என்று கத்திக்கொண்டே ஓட தொடங்கினான்.

ஆத்திரகரனுக்கு புத்தி மட்டுதானே. அவன் கதை முடிந்தது. இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது.

படித்ததில் பிடித்தது

ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.

தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்" என்பது.

ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதைக் கண்ட அவர் கணவர்,

"என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார்.

என் மாணவன் எழுதிய இந்தக் கட்டுரையை படித்துப் பாருங்கள் என்று கொடுத்தார். அதில்,

"கடவுளே, என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியைப் போல் ஆக்கிவிடு. நான் அதன் இடத்தைப் பிடிக்க வேண்டும். அதைப் போல‌ வாழ வேண்டும். எனக்கான இடம், என்னைச் சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சைக் கவனமாகக் கேட்க வேண்டும்.

அவர்களின் கவனம் என்னைச் சுற்றியே இருக்க வேண்டும். தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்புக் கவனத்தை போல் நானும் பெற வேண்டும். அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும்.

அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும். என்னை வில‌க்கக் கூடாது. என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும். சண்டையிடவேண்டும்.

என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும். கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும். என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை, நான் தொலைக்காட்சி பெட்டியைப் போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்."

இதை படித்துவிட்டு கணவர் சொன்னார்,

"அந்தக் குழந்தை பாவம் என்ன? இந்தக் குழந்தையைக் கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?"

ஆசிரியை தன் கணவரிடம் கூறினார்,

"இந்தக் கட்டுரையை எழுதியது நம் மகன்".

சென்னையின் அடையாளம் அழிந்து போனதின் உதாரணங்கள்

பிரின்ஸ் ஜுவல்லரி
ஜாய் ஆலுக்காஸ்
ஜோஸ் ஆலுக்காஸ்
கல்யாண் ஜுவல்லர்ஸ்
மலபார் கோல்ட்
கஸானா ஜுவல்லர்ஸ்
பாத்திமா ஜுவல்லர்ஸ்

மலையாளிகளின் நகைக்கடைகள்

உம்மிடி செட்டியார்
நாதெள்ளா செட்டி
ஆஞ்சநேயலு செட்டி
ஜி ஆர் டி
ஐயப்பன் நகைக்கடை

ஆந்திர செட்டியார்கள் நகைக் கடைகள்

லலிதா ஜுவல்லர்ஸ் - இலங்கை குடிமகன் கடை

முத்தூட் ஃ பைனான்ஸ்
மனப்புரம் ஃ பைனான்ஸ்
கொசமட்டம் ஃ பைனான்ஸ்

மலையாளிகளின் நகைக் கடன் வழங்கும் ஸ்தாபனங்கள்

இவர்கள் மொட்டை அடிப்பதென்னவொ தமிழன் தலைகளை.

தமிழனுக்கு அட்சய திருதியை அன்னிக்கு தங்கம் வாங்கவும் அடுத்த நாளே அடமானம் வைக்கவும் மட்டுமே தெரியும். அதனால்தான் இந்த இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் தமிழன் இரத்தம் குடித்து சென்னையில் ஒட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

முல்லைப் பெரியார் தண்ணீரோ அலமாட்டி தண்ணீரோ கொடுக்க மறுக்கும் இவர்களின் அரசியல் வாதிகளின் சட்டையைப் பிடித்து தமிழனுக்கு தண்ணீர் வாங்கித்தர முன் வருவார்களா இந்த அட்டைப் பூச்சிகள் .

பை தி வே ...... ஆலுக்காஸும் , முத்தூட்டும் பங்காளிகள்......

பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம் !

"காவிரிப்பூம்பட்டினம்" - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் !

கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்! ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் !!

தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்". பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம்!! காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான்!! இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது !!

இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது.
ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்"
மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்".
இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தேட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது! இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது!! அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராம இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்!! பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி", இரவில் நடப்பது "அல்லங்காடி" !!


ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்க்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது! இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர்! இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பட்டு வியாபாரிகள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை, வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் !

பட்டினப்பாக்கம்:
இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர், ஜோதிடர், ராணுவம், அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் !!

இங்கு ஐந்து மன்றங்கள் அமைக்கபட்டிருந்தன
(௧) வெள்ளிடை மன்றம்
(௨) எலாஞ்சி மன்றம்
(௩) நெடுங்கல் மன்றம்
(௪) பூதச்சதுக்கம்
(௫) பாவை மன்றம்

இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியத் தோட்டங்கள்
(௧) இளவந்திச்சோலை
(௨) உய்யணம்
(௩) சன்பதிவனம்
(௪) உறவனம்
(௫) காவிரிவனம்

பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது. அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர்!! நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது !!

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் "சுனாமி" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு. சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது.


மணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது வருடா வருடம் தவறாமல் "இந்திர விழா" கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.

இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் "சிலப்பதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது! இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகளும், அறிய தகவல்களும் வெளி வர வாய்ப்புள்ளது!! தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும். அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.

வாழைப்பூ- மருத்துவக் குணங்கள் :-

இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

இந்த இதழில் ஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ பற்றி தெரிந்துகொள்வோம்.

நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன.

வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது.

குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுகின்றனர். வாழைப்பூ எந்த அளவுக்கு நமக்குப் பயன்படுகிறது என்பதற்கு இதுவே மிசச் சிறந்த சான்று.

வாழைப்பூ மூலஇரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் - அழியனல்
என்னஎரி கைகால் எரிவுத் தொலைத்துடலில்
மன்னவளர்க் குந்தாது வை.
- அகத்தியர் குணபாடம்

வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.

குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

உடல் சூடு

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.


கைகால் எரிச்சல் நீங்க

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க

வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

தாது விருத்திக்கு

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மை நீங்க

சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

சிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்களை பெற !!!

இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.

அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம்.

இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.

நீங்கள் இந்த( http://isobuster.com/ ) இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும்.

இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள்.