பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் கவுரவ மேயர் பதவி அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாள் மேயராகப் போகும் அம்மாணவியின் பெயர் சுனந்தா கயர்வர். இவர்
மத்திய பிரதேச மாநிலம் உக்ஜைன் மாவட்டம் நக்தா என்ற நகரைச் சேர்ந்தவர். 17 வயதான சுனந்தா பிளஸ் 2 தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து நக்தா நகரில் முதல் மாணவியாக வந்துள்ளார்.
இதனால், சுனந்தாவை கவுரவிக்கும் பொருட்டு அவருக்கு ஒரு நாள் மேயர் பதவி
வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகரின் மேயர் ஷோபா யாதவ் அறிவித்துள்ளார்.
மேலும், மாணவ, மாணவிகளை கல்வியின் மேல் ஆர்வம் கொள்ளச் செய்யும்
திட்டத்தினாலும் இக்கவுரவ மேயர் பதவி வழங்கப்பட இருப்பதாக அவர்
தெரிவித்துள்ளார்.
வரும் 28-ந்தேதி (28/05/2013) செவ்வாய்க்கிழமை பதவியேற்க
இருக்கும் மாணவி சுனந்தா அன்று காலை முதல் மாலை வரை மேயர் இருக்கையில்
அமர்ந்து மேயர் பணிகளை கவனிப்பாராம். அரசிடம் முறைப்படி அனுமதி பெற்றே,
இந்த ஒருநாள் மேயர் திட்ட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக மேயர் ஷோபா
யாதவ் அறிவித்துள்ளார்.
25-ந்தேதி மேயர் பதவியில் அமரும் மாணவி
சுனந்தா அன்றைய தினம் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.40 லட்சம்
செலவில் சாலை அமைக்கும் திட்டத்தில் கையெழுத்திடுகிறார். தந்தை
தொழிற்சாலையில் பணிபுரிகிறார். தாய் அங்கன்வாடி ஊழியர். சுனந்தாவின் உடன்
பிறந்தோர் மொத்தம் 4 பேர். தான் என்ஜினீயராகி குடும்பத்தை காப்பாற்ற
வேண்டும் என்பதே நோக்கம் என்று சுனந்தா தெரிவித்தார்.
No comments:
Post a Comment