ஸ்மார்ட் போன்களில் பல்வேறு மென்பொருள்கள்
பயன்படுத்தப்படுகிறது. இந்த வரிசையில் நோய்க்கிருமிகளை கண்டறியும் ஒரு
புதிய மென் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அமெரிக்காவின்
இலினோய்ஸ் மாகாணத்தில் உள்ள இலினோய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மென்பொருள் ஸ்மார்ட் போனில்
உள்ள கேமரா மற்றும் அதன் செயல்பாட்டுத் திறனை உயிர் உணரும் கருவியாக
பயன்படுத்தி சுற்றுச்சூழலில் உள்ள நச்சுக்கள், பாக்டீரியா, வைரஸ்
போன்றவற்றை கண்டறியும் திறன் கொண்டது.
இந்த முறையின் மூலம்
தற்காலிக கள மருத்துவமனைகளில் சோதனைகளையும், உணவுப் பொருட்களின்
மாசுகளையும் மிகக் குறைந்த செலவில் உடனடியாக கண்டறியலாம் என்று ஆராய்ச்சிக்
குழுவினர் தெரிவித்தனர்.
இதனைக்கொண்டு நிலத்தடி நீரில் உள்ள நோய்க்கிருமிகளைக் கூட கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment