ஐரோப்பாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு
புதிய தலைவர் நியமிப்பதற்காக, ஒரு பெரிய வேலை வாய்ப்பு முகாம்
ஏற்ப்படுத்தினார ் பில் கேட்ஸ் அவர்கள் , அதில் 5000 பேர் கலந்து
கொண்டனர்.
ஓதில் ஒருவர் நமது " ராமசாமி"...
பில் கேட்ஸ்: உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா மென்பொருள்(java) பற்றி
தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள், மற்றவர்கள் வெளியே செல்லவும்..
2000 பேர் வெளியேறிவிட்டனர ்.
ராமசாமி : எனக்கு ஜாவா தெரியாது இருந்தாலும் பார்ப்போம்..
பில் கேட்ஸ் : இதுவரை 100 பேருக்கு மேல் நிர்வாகம் செய்த திறமை இருக்கிறதோ அவர்கள் மட்டும் இருக்கவும்,
2000 பேர் வெளியேறிவிட்டனர ்.
ராமசாமி : இதுவரை நான் யாரையும் நிர்வகிக்க வில்லையே , பார்ப்போம் என்ன நடக்கும் என்று..
பில் கேட்ஸ்: யாரிடம் எல்லாம் பல்கலை கழக பட்டம் இருக்கிறதோ, அவர்கள் மட்டும் இருங்கள்...
500 பேர் வெளியேறிவிட்டனர ்.
ராமசாமி : நான் பதினைந்து வயதிலயே பள்ளியை விட்டு ஓடி விட்டேனே, பொறுத்திருந்து பார்ப்போம்..
பில் கேட்ஸ் : யாருக்கெல்லாம் ரஷிய மொழி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள்..
498 பேர் வெளியேறிவிட்டனர ்.
ராமசாமி : எனக்கு அம்மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாதே, முக்கால் கிணறு தாண்டிவிட்டோம் என்ன நடக்கும் என்று பார்ப்போம்...
பில் கேட்ஸ் அவர்கள் அருகில் வந்து, நீங்கள் இருவரும் தான் எல்லா
தகுதியையும் பெற்று இருக்கிறீர்கள், எனவே நீங்கள் இருவரும் ரஷிய மொழியில்
உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளு ங்கள்...
ராமசாமி, அமைதியாக மற்றொருவரை பார்த்து...
எந்த ஊரு...?
மற்றொருவன் : " திருநெல்வேலி பக்கம் "
அங்க நிற்கிறான் "தமிழன்"
No comments:
Post a Comment