இரண்டு பாதிரியார்கள் ஒரு ஸ்கூட்டரில் வேகமாகச்சென்று கொண்டிருந்தனர். ஒரு போலீஸ் அதிகாரி அவர்களை நிறுத்தி,''ஏன் இவ்வளவு வேகமாகப் போகிறீர்கள் விபத்து ஏற்படலாமல்லவா? மெதுவாகச் செல்லுங்கள் ,''என்று கூறினார்.
ஒரு பாதிரியார் சொன்னார்,''அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கடவுள்
எங்களுடன் இருக்கிறார். ''உடனே போலீஸ் அதிகாரி சொன்னார்,''அப்படியானால்
நான் உங்களை ஓவர்லோடு சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். ''பாதிரியாருக்கு
ஒன்றும் புரியவில்லை.ஏனென்று கேட்க,''உங்களுடன் கடவுளும் இருந்தால்
ஸ்கூட்டரில் மூன்று பேர் பயணம் செய்கிறதாகிறது. ஸ்கூட்டரில் மூன்று பேர்
பயணம் செய்வது குற்றம்,''என்றார் போலீஸ் அதிகாரி.
“உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.”
யாத்திராகமம் 20:7
No comments:
Post a Comment