வேதாகமம் கொடுக்கப்படும் போது அதை பெறக்கூடிய
நிலையில் இருந்தவர்கள் யூதர்களாக இருந்தனர். ஆகவே யூதர்களின் பழக்க
வழக்கத்தின் படியும் அவர்களின் கலாச்சாரத்தின் படியும் வேதாகமத்தின்
எழுத்துக்கள் அமைந்தன. அக்காலத்தில் யூதர்கள் தங்கள் குல பெயரையே
பாவித்தனர். அதாவது யாக்கோபிற்கு பிறந்த 12 மகன்களின் பெயர்களே அவர்களது
குல பெயராக இருந்தது. இதன் மூலமாகவே இஸ்ரவேலர் என அழைக்கப்படுகின்ற
யூதர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றை நினைவு படுத்துவர்.
இயேசு தாவீதின்
அரச வம்சத்தில் வருவார் என எதிர்வு கூறிய பழைய ஏற்பாடானது சரியானது என
நிரூபிக்கும் பொருட்டே, புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வம்ச வரலாற்றை
மத்தேயுவும் லூக்காவும் எழுத தலைப்பட்டனர். அவ்வாறு எழுதிய மத்தேயு
தாவீதின் மகனான சாலமோனிலிருந்து எழுதுகிறார். லூக்காவோ தாவீதின் மகனாக
நாத்தானை காட்டுகிறார். இவ்வாறு இரு பக்கமும் தாவீதின் அரச குடும்பமாகவே
இயேசு காண்பிக்கப்படுகின்றார். அதாவது சாலமோனிலிருந்து யாக்கோபின் நேரடி
வரலாறு காட்டப்படுகின்றது. நாத்தானிலிருந்து மரியாளது வம்ச வரலாறு
காட்டப்படுகின்றது. ஆக இயேசுவின் பெற்றோர் யாக்கோபுவும் மரியாளும்
தாவீதினது வம்ச வழியில் வந்த அரச பரம்பரை என்பதே மத்தேயுவினதும்
லூக்காவினதும் வாதமாக உள்ளது.
இது ஏனைய சமுதாயங்களுக்கு முக்கியமற்ற
விடயமாக உள்ளதாக வேதாகமத்தில் காணப்பட்ட போதும், யூத சமுதாயத்தினரின் ஓர்
கொள்கையாகவே இது காணப்படுகின்றது.
ஆகவே வேதாகமத்தை குறித்து கலங்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் குளறுபடிகள் இல்லை.
No comments:
Post a Comment