Saturday, 25 May 2013

குளிர்பானம் உடலுக்கு நல்லதா! ! ! !

குளிர்பானம், சோடா போன்ற திரவ உணவுகள் உடலுக்கு நல்லதா?

குளிர்பானம், சோடா போன்ற பானங்கள் காற்று அடைத்த திரவங்களாகும். மேலும் அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது. எனவே இது உடலிற்கு கேடு விளைவிப்பவை ஆகும்.

நீச்சல் குளத்தில் பயிற்சி பெறும் சிறுவர்களுக்கு தொண்டை வலி ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?

நீச்சல் அடிக்கும்போது தண்ணீரைக் குடிப்பதால் தொண்டையில் கிருமி தொற்று ஏற்பட்டு வீங்கி விடும். உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இடுப்பு சதையை குறைக்க சிகிச்சை உள்ளதா?

இடுப்பிலுள்ள கொழுப்பை உறிஞ்சி எடுப்பதாலும், அப்டமன் பிளாஸ்டி என்று அழைக்கப்படும் வயிற்றிலிருந்து சிறிய பகுதியை அறுவை சிகிச்சை செய்து நீக்குவதாலும், உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியினாலும் இடுப்பு பருமனை குறைக்கலாம்.

குழந்தை பால் குடித்த பின்னர் கக்குகிறது. இது நல்லதா? கக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்கு பிறந்து 6 மாதங்கள் வரை ஏப்பம் விடும் திறன் குறைவாக இருக்கும். எனவே தான் பால் குடித்தவுடன் தோளில் போட்டு முதுகில் தட்டி விடுவார்கள். ஏப்பம் வந்த பிறகு மீண்டும் படுக்க வைப்பார்கள். சில சமயங்களில் ஒவ்வாமை காரணமாக பாலைகக்கும். அதனால் ஒன்றும் பிரச்னை இல்லை. அதுவே அடிக்கடி நடந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

எந்தெந்த தொந்தரவு இருந்தால் எண்டோஸ்கோபி செய்து கொள்ளலாம்?

அடிக்கடி ஏப்பம் வருதல், எதுக்கலித்தல, சாப்பிட்டபின் வயிற்று வலி ஏற்படுதல், சாப்பிட்டால் வயிற்றுவலி நின்றுவிடுதல். ரத்த வாந்தி எடுத்தல், வயிற்றுக்குள் பந்து உருளுவது போன்ற உணர்வு, பசிக்காமலிருப்பது மற்றும் குறைவாக சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விடுவது போன்ற பிரச்னைகளுக்கு எண்டோஸ்கோபி மூலம் பரிசோதித்து கொள்ளலாம்.

மூலம் அறுவை சிகிச்சை செய்பவர்கள் திரும்ப திரும்ப செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா?

ஒரு தடவை மூலநோய் அறுவை சிகிச்சைசெய்தவர்கள் மருந்து மற்றும் உணவுக்கட்டுப்பா ட்டில் இருக்க வேண்டும். கட்டுப்பாட்டை தவற நேரிடும்போது மீண்டும் பாதிக்க வாய்ப்பிருக்கிற து.

நாம் உண்ணும்போது மீன் முட்கள், சிக்கன் மற்றும் மட்டன் எலும்புகள் வயிற்றுக்குள் சென்றுவிட்டால் அதனால் ஏற்படும்பாதிப்புகள் என்ன? அதை எப்படி சரி செய்வது?

சிறிய முட்கள் மற்றும் எலும்புகளிருந்த ால் மலத்தில் வெளி வந்து விடும். ஆனால், பெரிதாக இருந்தால் மீன் முள் தொண்டையிலோ அல்லது உள்ளே சிக்கி விட வாய்ப்பிருக்கிறது. எலும்பும் பெரிதாக இருந்தால் உள்ளேயே தங்கிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே உண்ணும்பொழுதே பார்த்து அரைத்துமென்று உண்ண வேண்டும்.

No comments:

Post a Comment