Thursday, 23 May 2013

பிசாசுகளுக்கும் விசுவாசிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?

இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கின்றது ,அவருக்கு கீழ்படிகின்றது ,அவரிடம் வேண்டுதல்  செய்கின்றது.அவருக்கு பயப்படுகின்றது அவருக்கு முன்பாக நடுங்குகிறது ,ஆலயத்திலும் காணப்படுகின்றது, அவரது ஊழியர்களை பாராட்டுகிறது , இயேசு பரிசுத்தர் என்று புகழ்ந்த்தது ,அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்.அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.mark 1:23-24 அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன்செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான்.mark 9:25-26 தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள்ளே போகும்படி தங்களுக்கு உத்தரவுகொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார்.Luk 8:31-32 பிசாசுகள் இப்படியாக இருக்கும்போது நாம் எப்படி இருக்க வேண்டும், பிசாசுகளுக்கும் விசுவாசிகளுக்கும் இடையில்  உள்ள வித்தியாசம் என்ன? .நமக்காக இயேசு இரத்தம் சிந்தினார் ,பிசாசுகளுக்காக அல்ல ,நம்மை நேசிக்கிறார் பிசாசுகளை அல்ல,எனவே நாம் நமது வாழ்வை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து ,அவர் சிலுவையில் அடிக்கப்பட்ட நோக்கத்தை அறிந்தவர்களாகவும் அவர் எம்மிடம் எதிர்பார்ப்பதையும் நிறைவேற்றுவோமா ?

No comments:

Post a Comment