Monday, 20 May 2013

இஸ்ரேலின் ஆயுத உதவிகள் இலங்கைக்கு இல்லை.

எல்லா நாடுகளிலும் ஆயுதங்களை பெற்று இலங்கையை தனி அரசாக கொண்டு வரும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் இஸ்ரேலுக்கும் தூதுவர்களை அனுப்பி ஆயுதங்கள் பெற்று வரச் சென்றது இலங்கை அரசு.
ஆயினும் இந்த திட்டங்களை அறிந்து கொண்ட இஸ்ரேல் இதற்கு உடன்படவில்லை என்பது பெரிய காரியம். தனது ஆயுதங்களை இலங்கைக்கு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இது நல்ல விடயமே.
இனி இஸ்ரேலின் ஆயுதங்கள் இலங்கைக்கு கி்டைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை.
இலங்கை அரசு தனது நன்மைக்காக உலகை ஏமாற்றி வருகிறது என்பது வெளிப்படையாக தெரியும் உண்மை.
ஆயுதங்களை பெற்று வரச்சென்ற இலங்கை அரசின் ராஜதந்திரிகள் சமாதானத்தையல்ல, யுத்தத்தினையே ஆதரிக்கின்றனர் என்ற கருத்து எல்லோருக்கும் தெரிந்த விடயமே.
இவ்விதமாக உலகை ஏமாற்றி வருகிறது இல்ஙகை அரசு. தமது சமயத்தை பெற்றுக்கொண்ட இந்தியாவை ஏமாற்றி பாகிஸ்தானுக்கும், நிலைகளை ஏற்படுத்தி வருகின்றது தெளிவான விடயமே.
கடைசியாக சுதந்திரத்திற்காக போராடும் நாடுகளைக் கூட விட்டு வைக்கவில்லை இலங்கை அரசு. சுதந்திரம் பெற்ற நாடுகளை இலங்கை அரசு ஐக்கிய நாடுகளில் கூட ஏற்கவில்லை என்பது பரிதாபமே.

No comments:

Post a Comment