Saturday, 25 May 2013

உலக பணக்கார வரிசையில் முகேஷ் அம்பானிக்கு 25 வது இடம்! ! ! !

உலக பணக்கார வரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார் மைக்ரோ சாஃப்ட் பில்கேட்ஸ். 57 வயதாகும்வருடைய சொத்து மதிப்பு 72.7 பில்லியன் டாலர். இது கடந்த ஆண்டை விட 16 சதவிகிதம் அதிகம். இரண்டாவது இ இடத்தை கார்லஸ் சிம்ஸ் பிடித்துள்ளார்.

இவரது சொத்து மதிப்பு 71.1 பில்லியன் டாலர். இந்த மதிப்பு ஆண்டை விட 4.1 பில்லியன் டாலர் குறைவு. இந்த பட்டியியலில் கடந்தவருடத்தை விட 24 பில்லியன் டாலர் சொத்துகளை அதிகமாக வைத்திருந்தாலும் வாரன் பஃப்பட்டுக்கு மூன்றாவது இடம் தான் கிடைத்துள்ளது. இவரின் தற்பொழுதைய சொத்து மதிப்பு 59.7 பில்லியன் டாலர் ஆகும்.

இந்த வரிசையில் முகேஷ் அம்பானி 25வது இடத்தையும், லட்சுமி மிட்டல் 54 வது இடத்தையும் பிடித்துள்ளார்கள். இவர்களின் சொத்து மதிப்பு முறையே 24 பில்லியன் டாலர் மற்றும் 15.2 பில்லியன் டாலர்.

No comments:

Post a Comment