Saturday, 25 May 2013

உலகின் சக்தி வாய்ந்த பெண் இவர்தானாம்! ! ! !

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திரா நூயி முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளனர். சோனியா காந்தி 9வது இடத்தையும், இந்திரா நூயி 10வது இடத்தையும் பெற்றுள்ளார்.

ஜெர்மனை சேர்ந்த ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனை அடுத்து முறையே பிரேசில் ஜனாதிபதி தில்மா ரவுசெப், மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் தலைவர் மெலிண்டா கேட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிக்செல் ஒபாமா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

ஐசிஐசிஐ தனியார் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் 65வது இடத்தையும், பயோகான் அமைப்பின் நிர்வாகி கிரண் முசம்தார் ஷா 85 வது இடத்தையும் பிடித்துள்ளனர். போர்ப்ஸ் பத்திரிக்கை இந்த பட்டியலை அரசியல், தொழிற்துறை, மீடியா, தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்தவர்களை கொண்டு தயாரித்துள்ளது.

No comments:

Post a Comment