நீரிழிவுக்கு முந்தைய நிலையே ப்ரீடயப்பட்டிஸ் .
ஒருவரது ரத்த சர்க்கரையின் அளவு, சாதாரண அளவைவிட, சற்றே அதிகமாக இருக்கும்.
அதே நேரம் டைப் 2 நீரிழிவு என உறுதி செய்யப்படுகிற அளவையும்
எட்டியிருக்காது . இந்த நிலை, மெல்ல மெல்ல ஒருவரை டைப் 2 நீரிழிவை நோக்கி நகர்த்துவதோடு, அது தொடர்பான இதர பிரச்னைகளையும் கொடுக்கும்.
குழந்தைகளுக்கும ் இதே நிலைதான். ஆறுதலான ஒரே விஷயம், உணவுக்கட்டுப்பாடு,
எடைக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள்
போன்றவற்றின் மூலம் அது நீரிழிவாக மாறுவதைத் தவிர்க்கலாம்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
ரத்தப் பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம்.
சாப்பிடுவதற்கு முன்பான ரத்தப் பரிசோதனையில் ரத்த சர்க்கரையின்அளவு
100 முதல் 125 வரை இருந்தால், நீங்கள் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் நிற்கிறீர்கள் என அர்த்தம்.
126 அல்லது அதற்கு மேல் என்றால் நீரிழிவு வந்துவிட்டது என்பது உறுதி.
சாப்பிட்ட பிறகான சோதனையில்...
140 என்றால் சாதாரணம்.
140 முதல் 199 வரை என்றால் நீரிழிவுக்கு முந்தைய நிலை.
200 என்றால் நீரிழிவேதான்!
No comments:
Post a Comment