ஐஸ்வர்யாராயிக்கு பிறந்த குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று கேட்டால் அதற்கு
சரியான விடை சொல்லும் நம்மில் எத்தனை பேருக்கு விதர்பாவில் தினம் தினம்
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின்
எண்ணிக்கை பற்றி தெரியும்...காரணம் மீடியா...மீடியாக்கள் இந்த செய்திளுக்கு
முக்கியத்துவம் கொடுப்பதில்லை..
இந்தியாவின் தூண் விவசாயம் ..
ஆனால் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு செயலாற்றும் விவசாயிகளின் நிலை
என்பது வறுமை மட்டும் தான் மிச்சம்.. இந்த விவசாயிகள் ஒன்றும் ஆடம்பர
வாழ்கைக்காக மல்லையாவை போன்று கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவழிக்கவில்லை
.மாறாக விவசாயம் செய்வதற்காக வாங்கிய கடனை கட்டமுடியாமல் தற்கொலை செய்து
கொண்டவர்கள்..
மத்திய வேளாண் துறை இணையமைச்சர் அறிக்கை படி ஜனவரி
2013 வரை 10 மாதங்களில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 228
பேர்..ஆயிரக்கணக்கான கோடிகளை வாங்கி ஏமாற்றுபவர் வங்கியை
ஓடவிடுகிறார்..ஆனால் உணவை உற்பத்தி செய்ய சில ஆயிரங்கள், கடனை வாங்கிய
விவசாயி கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கடனின் நெருக்கடிகளால் தற்கொலை
செய்து கொள்கிறார்.ஆனால் இந்த செய்திகளுக்கு மீடியாக்கள் முக்கியத்துவம்
கொடுப்பதே கிடையாது. காரணம் கிரிக்கெட்டுக்கும் , சினிமாவிற்கும்
முக்கியத்துவம் கொடுக்கும் மீடியாக்களில் ஏழைகளின் ,பாதிக்கப்பட்டவர்களின் ,
அப்பாவிகளின் கண்ணீரை என்றைக்கும் வெளிஉலகுக்கு உணர்தப்போவதில்லை
No comments:
Post a Comment