Monday, 20 May 2013

நிலத்தில் விழுந்த கோதுமை மணி


இவர் பல தற்கொலை படை தீவிரவாத தாக்குதல்களை இஸ்ரேல் தேசத்தின் மீது ஏவிவிட்டவர். ஹமாஸ் இயக்கத்தில் பல குழுக்களை முன் நின்று இயக்கி வந்தார்.

ஹமாஸ் இயக்கத்தின் தலைவன் ஷேக் ஹசன் யூசுப் அவர்களின் மகன் "மோவாப்" இயேசு கிறிஸ்துவின் அன்பை அறிந்து கொண்டு தன்னை கிறிஸ்தவன் என்று வெளிப்படையாக அறிக்கை செய்தார். இவரின் தந்தை தான் 'ஹமாஸ்' என்கிற ஓர் இயக்கத்தை ஆரம்பித்து இஸ்ரேலின் மீது பல தாக்குதல்களை நடத்தியவர். பல வருடங்கள் இவர் இஸ்ரேல் சிறையில் அடைபட்டு கிடந்தார்.
ஹமாசின் கோரதாண்டவத்தை சகிக்க முடியாத இவர் பொது மக்களும், குழந்தைகளும் ஹமாஸ் இயக்கத்தால் எப்படியெல்லாம் பாதிக்கபடுகிறார்கள் என்பதை நேரில் பார்த்து இஸ்லாமின் மீது வெறுப்பு கொண்டார். பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஓர் ஊழியக்காரர் மூலம் இயேசுவின் அன்பை தெரிந்து கொண்டார்.

2010 ம் ஆண்டு தன்னுடைய சாட்சியை "சண் ஆப் ஹமாஸ்" என்று தலையங்கம் கொண்ட புத்தகமாக எழுதியுள்ளார். இவர் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்ட இவர் குடும்பம் இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால் தான் கிறிஸ்துவை மகிமைபடுத்தும் நேரம் இது, மேலும் அது தன் கடமை என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் கூறுகையில் இஸ்லாத்தில் கிறிஸ்துவை குறித்து அறிந்து கொள்ள விடாமல் இருட்டடிப்பு செய்கின்றனர் என்பதாகவும் கிறிஸ்து யார் என்பதை அறிந்தால் கிறிஸ்தவர்களாக மாறாமல் இருக்க முடியாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் மோவாப் கூறுகையில் கிறிஸ்துவை ஏற்றுகொண்ட பல இஸ்லாமியர்கள் வெளிப்படையாக அவர் நாமத்திற்கு மகிமையாக தங்களை வெளிப்படுத்த தயங்குகின்றனர். அநேகர் மரண பயத்தால் தங்களை ஒளித்துகொண்டுள்ளனர் என்று fox news என்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுக்கும் பொது வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தேவனுக்கே மகிமை. நீங்கள் எவ்வளவு பேர் முகமதிய மக்களின் மன மாற்றத்திற்காக ஜெபித்துக்கொண்டு வருகிறீர்கள் என்று தெரியாது. நீங்கள் இப்படிப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்று சுவிஷேசம் கூறமுடிய விட்டாலும் உங்கள் ஜெபம் ஒன்றே போதும். எப்படிப்பட்ட மலையையும் கடுகு போல மாற்றிவிடும். உங்கள் ஜெபங்கள் கேட்கப்பட்டது. தொடர்ந்து ஜெபியுங்கள். இப்படிப்பட்ட தேசங்கள் இயேசுவை முழுமையாக காண நாம் நம் முழங்கால்களை முடக்குவோம். ஆமென்.


No comments:

Post a Comment